இக்கவிதையை நான் என் விடுதி நாட்களில் எழுதியது. அச்சமயம் நான் ரத்தான அமைப்பாளர்ராக செயல்பட்ட அனுபவம் இக்கவிதையின் கருவானாது.
சிந்தனை கடலில் சிறப்பாய்
தத்தளிக்கும் கனவின் தருணத்தில்
அவசர மணி அழைத்திட
தொல்லையாய் எண்ணிய தொலைபேசியில்
புதுவரவாய் அறியா புது எண்கள்
முதல் பேச்சே முழுமையற்றதாய்
உள்ளம் பதைபதைக்க உறவுக்காக
பதட்டம் தொண்டையில் பரபரப்பாய்
அரிய வகை இரத்தத்தை அவசரமாய் சொல்ல
தூக்கம் கலைந்து துடிப்புடன்
எண்ண ஓட்டங்கள் எழுச்சியடைய
தகவல் பறந்தது தன்னார்வாளர்களுக்கு
அழைப்புகள் பலருக்கு விரைந்தன்
சிலர் நோயென்று சிரித்தார்கள்
பயம் என்று பதுங்கினார்கள்
கரையும் பொன்னான காலம்
கதவுகள் தட்டும் கரங்கள்
நிதமாய் விவரி நிலைமையை
முழுமையான தேடல் முடக்கி விடப்படும்.
இறைவன் அனுப்பிய இளைஞன்
அடையாளமிட்டு இரத்தத்திற்காக அணுக
சம்மதம் என்றாலும் சம்பிரதாயமிருக்க
கேட்கப்படும் பல கேள்விகளுக்கு
தரமான பதில்கள் தரப்பட்டால்
உதிரம் கொண்டு உதவிட
அவன் உடல் ஆரோக்கியம்
உதவிக்கு ஒருவனோடு உடனடியாக
பயணம் தொடங்கும் பாதுகாப்பாக
அனைத்தும் முடியும் அரைமணியில்
சற்று நேரம் சாய்வாய்
ஒய்வறையில் ஒதுங்க
மீண்டும் ஒர் அழைப்பு.
- ஹமீத் முஹம்மது ரிஸ்வான்
தத்தளிக்கும் கனவின் தருணத்தில்
அவசர மணி அழைத்திட
தொல்லையாய் எண்ணிய தொலைபேசியில்
புதுவரவாய் அறியா புது எண்கள்
முதல் பேச்சே முழுமையற்றதாய்
உள்ளம் பதைபதைக்க உறவுக்காக
பதட்டம் தொண்டையில் பரபரப்பாய்
அரிய வகை இரத்தத்தை அவசரமாய் சொல்ல
தூக்கம் கலைந்து துடிப்புடன்
எண்ண ஓட்டங்கள் எழுச்சியடைய
தகவல் பறந்தது தன்னார்வாளர்களுக்கு
அழைப்புகள் பலருக்கு விரைந்தன்
சிலர் நோயென்று சிரித்தார்கள்
பயம் என்று பதுங்கினார்கள்
கரையும் பொன்னான காலம்
கதவுகள் தட்டும் கரங்கள்
நிதமாய் விவரி நிலைமையை
முழுமையான தேடல் முடக்கி விடப்படும்.
இறைவன் அனுப்பிய இளைஞன்
அடையாளமிட்டு இரத்தத்திற்காக அணுக
சம்மதம் என்றாலும் சம்பிரதாயமிருக்க
கேட்கப்படும் பல கேள்விகளுக்கு
தரமான பதில்கள் தரப்பட்டால்
உதிரம் கொண்டு உதவிட
அவன் உடல் ஆரோக்கியம்
உதவிக்கு ஒருவனோடு உடனடியாக
பயணம் தொடங்கும் பாதுகாப்பாக
அனைத்தும் முடியும் அரைமணியில்
சற்று நேரம் சாய்வாய்
ஒய்வறையில் ஒதுங்க
மீண்டும் ஒர் அழைப்பு.
- ஹமீத் முஹம்மது ரிஸ்வான்
nice line
ReplyDelete