Thursday, 11 February 2016

மாய உலகில் எங்கே அவர்கள். . ?


 
                                                       

­
கருப்பு சாயம் வெளுக்கத் துவங்கிய நேரம்
காலைப் பணி மெல்ல விலகிட கண்டேன்
காகம் கரைந்திட; குயில் கானம் பாடிட
காலைப் பனியின் இனிமை என்னைச் சார

இளமையான இந்த காலைப் பொழுது
இழுத்துச் சென்றது இதமாய் இமைகளுக்குள்
இமைகள் மூட இருட்டை உணர்ந்தேன்
இன்றும் மறக்காத அந்த நாட்களின் வெளிச்சத்தை

துள்ளி ஓடிய தெருக்கள் எங்கே.?
துள்ளும் மீன்களிருந்த குளங்கள் எங்கே.?
தூங்கிய மரத்தடிகள்; மைதானங்கள் எங்கே.?
தூங்குகின்றனவோ.? அவை கட்டிடங்களுக்கு அடியில்.!


கால் வயிற்றுக் கஞ்சி தான்
கடவுள் கொடுத்த வரம்
கஞ்சியிலும் காகத்திற்கு பங்கு வைத்த
கால் உடை அனிந்த மனிதன் எங்கே.?

தான் பெற்ற பிள்ளைகள்
தன்னை தனிமையில் விட்டாலும்
தன்னை சுற்றியுள்ள பிள்ளைகளை
தன் பிள்ளை என்ற கிழவி எங்கே போயிற்றாள்.?

அடிபட்ட குருவியை மெல்ல எடுத்து
அதற்கு மருந்திட்டு உணவளித்து
அது குணமானவுடன் கொஞ்சித் தழுவி
அழகாய் பறக்க விட்ட அவன் எங்கே.?

முற்றத்தில் பேசும் பெண்கள்
முன்டியடித்து ஒடும் குழந்தைகள்
 முனங்கிக் கிடக்கும் பெரியவர்கள்
முழுவதுமாய் தொலைந்திட்டனரோ.?

பலகாயிட்டு சமைத்த உணவை விட
பச்சை மிளகாயுடன் கூடிய கஞ்சி
பாசத்துடன் நினைக்கிறது என் நாக்கு
பார்ப்போமா அந்த வெள்ளை மனதுக் காரனை என்று.


ஊழல் பெருகியது வாழ்க்கையில்
உணவுக்கு ஏக்கம் கொண்டது வயிறு
உலகம் வாழ்வதற்கு ஏற்றதா.?
உண்மையில் சந்தேகமே நம்பிக்கையற்றவர்களுக்கு.

வெறிச்சோடியிருந்த மருத்துவமனைகள்
பெருங்கோடிகளுக்கு சொந்தங்களாகின்றன
கொலை செய்யப்பட்டான் விவசாயி
கொலையாளி நிச்சயமாய் மரம் வெட்டுபவனே.

நான் தனித்தே இருந்தேன் எண்ணங்களுடன்
நாளைய உலகை எதிர் நோக்குவனாக
நன்றாய் இன்றைய நாளை அனுபவித்தவனாக
நம்பிக்கையுடன் தனித்திருக்கிறேன் நான். 


-      அ. ஹமீத் முஹம்மது ரிஸ்வான்.
இரண்டாம் ஆண்டு, MCA,
ஜமால் முஹம்மது கல்லூரி,
திருச்சி.




No comments:

Post a Comment

This Blog was constructed and maintainance by A. Hameed Mohamed Riswan. MCA., MDTP.